வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் : கொழும்பில் நாளை போராட்டம்
ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அச்சுறுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது நாளை (22) காலை 9 மணிக்கு கொழும்பிலுள்ள நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ளது.
ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் என்பன ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணை
வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்த கோரியும், ஊடகவியலாளர் குமணனை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு கோரியும் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு (Mullaitivu) ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் கடந்த 17ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் அளம்பில் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டு 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போது, முன்னிலையாக வேண்டும் எனவும், விசாரணை விடயங்கள் தொடர்பில் வெளியில் கூறக் கூடாது எனவும் கடுமையாக அறிவுறுத்தி விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஊடகவியலாளருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இவ்வாறான அடக்குமுறைக்கு எதிராக நாளை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
