இளைய சமூகத்தின் பார்வையில் ஈழத் தமிழர் போராட்டம்
சமகால ஈழத் தமிழர்களின் போராட்ட குணம் என்பது எந்த அளவுக்கு வலுவடைந்திருக்கிறது என்றால் அப்படி ஒன்றுமே இல்லை என்றுசொல்லும் அளவிற்குதான் இருக்கிறது என யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை மாணவன் லோஜன் தெரிவித்தார்.
ஐபிசி தமிழின் சிறப்பு விவாத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சமகால போராட்ட உணர்வு
“நாங்கள் போராட்டம் என்ற பெயரில் ஒரு மாயையை உருவாக்கி அதில் பிரபல்யம் அடையவே எத்தனிக்கிறோம்.
தமிழ் தேசிய நிகழ்வுகள் என்ற பெயரில் நிறையவே மேற்கொள்கிறோம். அதிலும் இன்னும் செய்ய காலம் தேவை என்று கூறுகிறோம்.
இன்னும் எத்தனை காலம் தேவை? அர்ப்பணிப்பு எங்கே இருக்கிறது? பல்கலைக்கழக காலத்தில் இந்த நான்கு வருடங்கள் போராட்டம் பற்றிய கனவுகள் அத்தனையும் ஒரு திருமணத்தோடு நீர்த்துப் போகப்படுகிறது.
தையிடிட்டியில் போராட்டம் நடக்கிறது. ஆனால், வரலாற்றில் என்றுமில்லாத சனக்கூட்டம் யாழில் வெசாக் அலங்காரங்களை காண கூடியது என்று செய்தித்தலைப்பாக இருக்கிறது.
நாங்கள் எப்படி போராடவேண்டும்? எதற்காக போராடவேண்டும் என்பதை இன்னமும் உணராதவர்களாகவே இருக்கிறோம்” - என்றார்.