நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Batticaloa SL Protest Eastern Province Sri Lanka Prevention of Terrorism Act
By Sathangani Jan 22, 2024 10:41 AM GMT
Report

மட்டக்களப்பில் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம், முன்வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அதிலுள்ள அதிபயங்கரமான ஆபத்துக்களை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டமும் உண்ணாவிரதமும் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஒழுங்கமைப்பில் இன்று (22) மட்டக்களப்பு நகரில் சிவில் சமூகத்தினரால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அரசியல் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட சுமார் 500இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்றப் பிரதி அலிஸாஹிர் மௌலானாவும் கலந்து கொண்டார்.

அரச மருத்துவமனைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் குற்றச்சாட்டு

அரச மருத்துவமனைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் குற்றச்சாட்டு

சமர்ப்பிக்கப்பட்ட  பிரகடனம்

கல்லடிப்பாலத்திலிருந்து ஆரம்பித்த பேரணி மட்டக்களப்பு நகர காந்திப் பூங்கா சதுக்கத்தில் முடிவடைந்ததுடன் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவிடம் கிழக்கு மாகாண சிவில் சமூகத்தின் பிரகடனம் கையளிக்கப்பட்டது.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் | Protest In Batticaloa For Online Safety Bill

பிரகடனத்தைப் பெற்றுக் கொண்டு அங்கு கருத்துத் தெரிவித்த அலிஸாஹிர் மௌலானா, நாடாளுமன்ற விவாதத்திற்குச் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் தாம் கடுமையாக எதிர்க்கப்போவதாக உறுதியளித்தார்.

இதேவேளை சிவில் சமூகத்தினரால் அலிஸாஹிர் மௌலானாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக,

சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தத் திட்டம்

சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தத் திட்டம்

முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் 

“எம்மால் வாக்களிக்கப்பட்டு மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பிரதிநிதியும் வாக்களித்த மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டில் உள்ளார்கள்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் | Protest In Batticaloa For Online Safety Bill

எனவே, எங்களது அடிப்படை உரிமைகளையும், சுதந்திரங்களையும் பாதுகாப்பதற்கும் அவற்றை முற்றுமுழுதாக நாங்கள் அனுபவிப்பதற்குமான சூழலை உறுதி செய்வது மக்களால் உருவாக்கப்பட்ட அரசினுடைய தார்மீகக் கடப்பாடு என்பதைக் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண சிவில் சமூகம் என்ற அடிப்படையில் பின்வரும் பரிந்துரைகளை முன்மொழிகின்றோம்.

1)இலங்கை நாட்டின் நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டமானது எந்த ஒரு நியாயப்படுத்தலுமின்றி மீளப்பெறப்பட வேண்டும். இதன் வாயிலாக ஒவ்வொரு இலங்கை குடிமகனினதும் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

2)அரசினால் தற்போது முன்மொழியப்பட்டு சட்ட மூலமாக்குவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட வரைபுகளான பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம், நிகழ்நிலை காப்புச்சட்டம் மற்றும் ஒலிபரப்பு ஆணைக்குழுச்சட்டம் என்பன உடனடியாக மீளப்பெறப்படல் வேண்டும்.

3)இலங்கை அரசானது ஜனநாயக தளங்களையும் ஊடக சுதந்திரத்தையும் எந்த ஒரு மட்டுப்பாடுகளிமின்றி பாதுகாப்பதற்கான நிலையை உறுதி செய்தல் வேண்டும்.

4)அரசாங்கம் ஒவ்வொரு குடிமகனினதும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் குறிப்பாக கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், தகவல்களை அணுகுவதற்கான சுதந்திரம் என்பவற்றை மட்டுப்படுத்தலின்றியும் தலையீடின்றியும் அனுபவிப்பதற்கான நிலையை உறுதி செய்தல் வேண்டும்.

5)இலங்கை நாட்டுக்குள் ஒவ்வொரு மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் என்பன சட்டத்திற்குட்பட்டவாறு செயற்படும்போது அச்சுறுத்தப்படுவது, சட்டத்திற்கு முரணாண வகையில் கைது செய்யப்படுவது அல்லது அவர்களின் செயற்பாடுகள் முடக்கப்படுவது என்பன உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

6)பொருளாதார ரீதியாக நலிவுற்று வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒவ்வொரு இலங்கை குடிமகனினதும் வாழ்வியல் மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாக்கும் முகமாக முந்தைய ஆட்சியாளர்களால் சூறையாடப்பட்ட நிதி மற்றும் வளங்களை மீளப்பெறுவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டு அதனுடாக அவை பெறப்பட்டு மக்களினுடைய பொருளாதார, கல்வி மற்றும் சுகாதார நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

7)போர் மற்றும் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்ட்ட பொறுப்புக்கூறலை அரசு உறுதி செய்வதோடு பாதிக்கப்பட்ட மக்களுடைய நல்வாழ்விற்கான பரிகாரத்தை உறுதி செய்வதன் வாயிலாக இந் நாட்டின் நிலையானதொரு இன மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டும். ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் | Protest In Batticaloa For Online Safety Bill

அயோத்தியில் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு அனுமதி மறுப்பு..!

அயோத்தியில் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு அனுமதி மறுப்பு..!



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026