கொழும்பில் ஜனாதிபதியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தமையால் பதற்றம்!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
மக்கள் ஒன்றுக் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமையால் முரண்பாடு ஏற்பட்டது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் ஜனாதிபதியைப் போன்ற உருவ பொம்மையொன்றுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த உருவ பொம்மையை மாணவர்கள் எரிக்க முற்பட்ட போதும் பொலிஸாருடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
எனினும் அந்த பொம்மை எரிக்காமல் பொலிஸாரால் தடுக்கப்பட்டது. பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடிய பொலிஸார் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு இடமளித்திருந்தனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 6 மணி நேரம் முன்
