முக்கிய அமைச்சருக்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம் - குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்
Colombo
SL Protest
By pavan
கொழும்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு எதிராக போராட்டம் ஒன்று வெடித்துள்ளது.
இந்த போராட்டம் அரச நில அளவையாளர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“நில அளவை திணைக்களத்தின் துறை சார் பிரச்சினைகள் தொர்பாக பல தடவைகள் அமைச்சருக்கு நேரடியாகவும் கடிதம் மூலமும் தெரியப்படுத்தியும் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை” என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காணி விவகாரங்கள்

மேலும், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுற்றுலாத்துறையை மட்டுமே கவனத்திற்கொண்டு செயற்படுவதாகவும் காணி தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்துவதில்லை எனவும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் குறித்த பகுதிக்கு அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி