வீதியை மறித்து போராட்டத்தில் இறங்கிய மக்கள்!! கொழும்பில் பதற்றம் (காணொளி)
கொழும்பு - பஞ்சிகாவத்தை பிரதான வீதியை மறித்து மக்கள் போராடடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று நாட்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றும், எரிபொருள் கிடைக்கவில்லை என மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தமக்கான எரிப்பொருளை வழங்காதவரை அங்கிருந்து செல்ல போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு
நாடு முழுவதும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் மக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
இதேவேளை, பற்றாக்குறை காரணமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று அறிவித்திருந்தது.
அத்தோடு இன்று எரிபொருளை பெற்றுக் கொள்ளக்கூடிய நிரப்பு நிலையங்கள் தொடர்பான விபரங்களையும் வெளியிட்டது.
தொடர்புடைய செய்தி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 22 மணி நேரம் முன்
