மஹிந்தவின் வாசஸ்தலத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் (காணொளி)
protest
Prime Minister
Mahinda Rajapaksa
residence
By Vanan
கொழும்பு - பொரளை விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வாசஸ்தலத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பெருந்தொகையானோர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இதனால் குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கலகமற்ற முறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிரான தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி