மூதூர் மத்திய கல்லூரிக்கு முன்னால் வெடித்த போராட்டம்

Sri Lankan Tamils Trincomalee SL Protest NPP Government
By Sathangani Jun 16, 2025 11:16 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

திருகோணமலை (Trincomalee) - மூதூர் மத்திய கல்லூரிக்கு முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இன்று (16) இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையில் நிலவும் கட்டிடத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துதருமாறும், புதிய கட்டிடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

ஈரானில் தாண்டவமாடிய இஸ்ரேல் : இன்று கூடுகிறது முக்கிய கூட்டம்

ஈரானில் தாண்டவமாடிய இஸ்ரேல் : இன்று கூடுகிறது முக்கிய கூட்டம்

வாசகங்களை ஏந்தியவாறு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டோர் நாங்கள் கல்வி கற்க பாதுகாப்பான சூழலை உறுதி செய்யுங்கள், இடைநிறுத்தப்பட்ட கட்டிடத்தை மீளத்தாருங்கள், அரசே இடைநிறுத்தப்பட்ட வகுப்பறை கட்டிடத்தை உடனடியாக ஆரம்பி, அனர்த்தம் வரும் வரை காத்திராமல் அதற்கு முன்னர் தீர்வு தாருங்கள் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

மூதூர் மத்திய கல்லூரிக்கு முன்னால் வெடித்த போராட்டம் | Protest In Front Of T Mu Mutur Central College

மூதூர் மத்திய கல்லூரியில் காணப்படும் ஒரு கட்டிடம் கடந்த வாரம் இடிந்து வீழ்ந்துள்ளது. இன்னும் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாக 14 வகுப்பு மாணவர்கள் மர நிழலில் இருந்து கல்வி கற்று வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னைய அரசாங்கத்தால் மூதூர் மத்திய கல்லூரி புதிய கட்டிடத்திற்காக 120 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசாங்கத்தால் இவ் வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு இவ் அரசாங்கம் புதிய கட்டிடத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

யாழில் 19 வயதுடைய இளைஞன் அதிரடியாக கைது

யாழில் 19 வயதுடைய இளைஞன் அதிரடியாக கைது

மகஜர் கையளிப்பு

கவனயீர்ப்பு நிறைவடைந்த பின்னர் அவ்விடத்திற்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரை சந்தித்து கலந்துரையாடியதோடு கட்டிட நிலமைகளையும் பார்வையிட்டார்.

மூதூர் மத்திய கல்லூரிக்கு முன்னால் வெடித்த போராட்டம் | Protest In Front Of T Mu Mutur Central College

மூதூர் வலயக் கல்வி அலுவலக தொழில்நுட்ப அதிகாரிகளும் இவர்களோடு பிரசன்னமாகியிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களோடு பேசுவேன் என குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.

கோட்டையை கைப்பற்றிய NPP - கொழும்பு மாநகர சபை மேயர் சற்றுமுன் பதவியேற்பு

கோட்டையை கைப்பற்றிய NPP - கொழும்பு மாநகர சபை மேயர் சற்றுமுன் பதவியேற்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026