கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றம் : தொடரும் கைது நடவடிக்கை
புதிய இணைப்பு
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (2) இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சற்று முன்னர் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்ட காவல்துறையினரில் ஒரு உப காவல்துறை பரிசோதகர், 2 காவல்துறை உத்தியோகத்தர்கள் என மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு (Ministry of Education) முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் சேவையில் தம்மை நிரந்தரமாக இணைத்துக்கொள்ளுமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (02) முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாகவே இவ்வாறானதொரு நிலை உருவாகியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கலைப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில், சில காவல்துறை உத்தியோகர்கள் காயமடைந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பொரளை - கொட்டாவ வீதியின் (174 பேருந்து வழித்தடம்) போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வதில் உள்ள பிரச்சினை குறித்து அண்மையில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங் பிரதிநிதிகள் குழுவிற்கும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனாரத்னவிற்கும் (Madhura Senarathna) இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |