தமிழர் பகுதியில் வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் குதித்த மக்கள்
முல்லைத்தீவு(Mullaitivu) - ஐயன்கன்குளம் வைத்தியசாலை முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் உள்ள நோயாளர் காவுவண்டிக்கான நிரந்தர சாரதியை நியமிக்குமாறு கோரியியே இன்று(19.03.2025) பிரதேச மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வைத்தியசாலையில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாகவும் இரவு வேளைகளில் திடீர் நோய் நிலையின் போது உடனடியாக மல்லாவி வைத்தியசாலை கொண்டு செல்லக்கூடிய வகையில் நோயாளர் காவுவண்டிக்குரிய சாரதி நிரந்தரமாக அங்கே பணியாற்றுவதில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்கள் விடுத்த கோரிக்கை
அத்துடன், ஐயன்கன்குளம் வைத்தியசாலையில் நோயாளர் காவுவண்டிக்கான சாரதி சரியாக பணிக்கு இல்லாததால் நோயாளர்கள் பாதிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த வைத்தியசாலைக்கு நிரந்தரமான நோயாளர் காவுவண்டி சாரதியை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வடக்கு மாகாண ஆளுநருக்கான ஒரு மனு ஒன்றை குறித்த வைத்திய சாலையின் வைத்தியரிடமும் ஐயன்கன்குளம் காவல்நிலைய பொறுப்பதிகாரியிடமும் கையளித்துள்ளமை குறிப்பித்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்