இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு! யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்
Jaffna
SL Protest
Sri Lanka Fisherman
By Dilakshan
யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டமானது இன்றையதினம் (01) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனத்தினர் மற்றும் பொது மக்களினாலும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகஜர்

இதன்போது போராட்டக்காரர்கள் பாதாதைகளை ஏந்தியவாறும் "அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, கடற்றொழில் அமைச்சரே இந்திய இழுவை படகுகளின் வருகையை நிறுத்துங்கள், கைதுசெய் கைதுசெய் இந்திய இழுவைப் படகுகளை கைது செய் எனவும் கோஷமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் முடிவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.