மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் கோரி வெடித்த ஆர்ப்பாட்டம்
சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் இடம்பெறாத நிலையில், ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஆலயத்திற்கு முன்னால் இன்று(27) இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் வருடாந்த திருவிழா வேண்டாம் கும்பாபிஷேகம் வேண்டும் என கோரி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இளம் சைவ மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டினையடுத்து ஆலயத்தின் முன்னால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்ட சுலோகங்கள்
இதன்போது, இறை சிந்தனையுடனான சமய சமூகப் பணியில் பயபக்தியுடன் செயல்படுங்கள், வெளிப்படை தன்மையை பேணி ஒற்றுமையாக செயல்படுங்கள், வேண்டாம் வேண்டாம் ஊரை ஏமாற்றாதீர்கள், முருகனுக்கு கும்பாபிஷேகம் எப்போ? கடும் சொல் பேசாத பூட்டிய அறைக்குள் கூட்டமா?, இன்னும் பொறுமை வேண்டாம் அத்திப்பட்டியாக்கி விடுவார்கள் மக்களே விழித்தெழு என சுலோகங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயில் 12 வருடங்களுக்கு ஒரு முறை இந்து சமய ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் இடம்பெற வேண்டும்.
எனினும், தற்போது 14 வருடங்கள் கடந்தும் பாலஸ்தாபனம் செய்து கோவிலில் திருத்த பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

