எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடரும் பதற்றம் - அழைக்கப்படும் காவல்துறையினர் (photo)
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் பெற வரும் மக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பமும் பதற்றமான நிலையும் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
கெஸ்பேவயில்(Kesbewa) உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் உரிமையாளருக்கும் நுகர்வோரும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
அதேபோன்று கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு காலையில் இருந்து காத்திருந்த மக்களால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
காலை 9 மணியிலிருந்து மண்ணெண்ய்க்காக மக்கள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளனர். எனினும், முதலில் 20 லீட்டர் தருவதாக தெரிவித்தனர், பின்னர் 10 லீட்டர் என அறிவிக்கப்பட்டு பின்னர் மண்ணெண்ணெய் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் காலையிலிருந்து காத்திருந்த மக்கள் அப்பகுதியில் குழப்ப நிலையில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

