பல்கலைக்கழக மாணவர் சங்க போராட்டத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
Colombo
Ministry of Health Sri Lanka
SL Protest
Colombo National Hospital
By Raghav
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தால் நடாத்தி வந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி இன்று (27.03.2025) பிற்பகல் 2.30 முதல் நாளை(28.03.2025) மாலை 6 மணி வரை குறித்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக கொழும்பு நகர மண்டபத்தை சுற்றியுள்ள பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இதனால் வீதிகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தப்படுவதாக கூறி நீதிமன்றம் இந்த தடை உத்தரவை அறிவித்துள்ளது.
இதன்படி, சுகாதார அமைச்சின் நுழைவாயிலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பிரதான வீதி, டீன்ஸ் வீதி, செரம் வீதி, ரிஜண்ட் வீதி மற்றும் தேசிய வைத்தியசாலை சதுக்கத்தைச் சுற்றியுள்ள நடைபாதைகளை மறித்து போராட்டம் மற்றும் பேரணிகளை நடத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்