மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைகளை மீட்கக் கோரி மட்டக்களப்பில் நாளை கவன ஈர்ப்புப் போராட்டம்
Tamils
Batticaloa
Protest
By Independent Writer
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைகளை மீட்டுத் தரக் கோரி, மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டம் நாளை (02.11.2026) திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெறவுள்ளது.
"தமிழர் தேசமாக இந்த மண்ணின் பசுக்களுக்காக நாளை நாங்கள் ஒன்று சேருவோம், ஒன்று கூடுவோம், ஒன்றாவோம். ஒரு பெரும் எதிர்ப்பை, காலத்தின் எதிர்ப்பைப் பதிவு செய்வோம்" என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மயிலத்தமடு, மாதவனையில் தொடர்ந்துவந்த இந்தப் பிரச்சினை இப்போது திருகோணமலையிலும் தொற்றியுள்ளது. இந்த நிலத்தின் மக்களும், அவர்களுடைய கால்நடைகளும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக, ஈழத்தமிழினம் ஒரு தேசமாகத் திரள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி