பிரதமர் மகிந்தவை பாதுகாப்போம்! - நாளை நடைபெறவுள்ள மாபெரும் போராட்டம்
Mahinda Rajapaksa
Sri Lankan protests
Prime minister
Sri Lankan political crisis
Temple Trees
By Kanna
பிரதமர் மகிந்தவை பதவி விலகுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் அலரிமாளிகையில் கூடவுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து 'பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்'என பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் நாளை காலை அலரிமாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.
இதேவேளை, பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் நாட்டை ஆட்சி செய்ய உரிய திட்டம் இருந்தால் தான் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 7 மணி நேரம் முன்
