அரசாங்கம் முன்னெடுக்கும் சட்டவிரோத கைதுகளை கண்டித்து இன்று போராட்டம்
Jaffna
Gajendrakumar Ponnambalam
Government Of Sri Lanka
SL Protest
By Vanan
இன்று எதிர்ப்பு போராட்டம்
இன்று எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
இலங்கையில் போராட்டக்கார்கள் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் சட்டவிரோத கைதுகளை கண்டித்தே இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் வரை மக்களின் ஜனநாயக விருப்பங்கள் கடைப்பிடிக்கப்படாது எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச பயங்கரவாத செயல்
இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது நடவடிக்கை வெளிப்படையான அரச பயங்கரவாத செயல் எனவும் இந்தச் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீபன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
