ஆரம்பத்திலேயே மக்களின் நம்பிக்கையை சிதறடித்த அரசாங்கம்
ஆட்சி அமைத்த ஆரம்பத்திலேயே பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை ரணில் தலைமையிலான அரசாங்கம் சிதறடித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அமைதி வழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை கையாண்ட ரணில் தலைமையில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் நாங்கள் அதில் இணைந்து கொள்ளமாட்டோம்.
தற்போதைக்கு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்காக சேவை செய்வது மட்டுமே எங்கள் நோக்கமாக உள்ளது.
இந்த அரசாங்கம் ஆரம்பத்திலேயே மக்கள் விரோதப் போக்கைக் கையாண்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை சிதறடித்துவிட்டது.
அவ்வாறான ஒரு அரசாங்கத்தில் இணைந்து கொள்வதை விட எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
