இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை குறித்து வெளியான புதிய அறிவிப்பு
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் கணினி மற்றும் உபகரண அமைப்புக்கான மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வது தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விடயம் குறித்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சு (Ministry of Digital Economy) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் வணிகங்களுக்கு இந்தக் கொள்முதல்களின் கீழ் தேவையற்ற நன்மைகள் வழங்கப்படும் என்ற ஊடகச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அந்த அறிக்கயைில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும்
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மீதமுள்ள அனைத்து கொள்முதல்களும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இதுவரை செய்யப்பட்டுள்ளபடி அதிக வெளிப்படைத்தன்மை, சரியான தரநிலைகள் மற்றும் செலவு-செயல்திறனுடன் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
