தமிழின அழிப்பை கண்டித்து ஜெனிவாவில் கவனயீர்ப்பு போராட்டம் - புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு
கவனயீர்ப்பு நிகழ்வு
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பு செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் செயற்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு
இதற்கமைய 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இனவழிப்பு தொடர்பான கண்காட்சி ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.
அதேநேரம், 30 ஆம் திகதி மதியம் 2 மணி முதல் 6 மணி வரை கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களில் அனைத்து புலம்பெயர் தமிழர்களையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
அதேநேரம், அதில் பங்கேற்க வரும் மக்களுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

