பங்களாதேஷில் தீக்கிரையாக்கப்பட்ட கிரிக்கெட் வீரரின் வீடு: தொடரும் வன்முறைகள்
பங்களாதேஷ் (Bangladesh) பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியும், அந்நாட்டில் வன்முறை தொடர்கிறது.
இந்த நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரப் பின் மோர்டாசாவின் (Mashrafe Bin Mortaza) வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் பயணம்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் 117 கிரிக்கெட் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு அரிசயலில் களமிறங்கினார்.
ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கிய மோர்டாசா, 2018 இல் நரைல்-2 தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மோர்டாசாவின் வீடு
இதேவேளை, இந்த ஆண்டு தொடக்கத்தில் பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராகப்போட்டியிட்டு, அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, நரைல்-2 தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் படி, பங்களாதேஷில் வெடித்த பாரிய மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் மோர்டாசாவின் வீட்டை நாசம் செய்த வன்முறையாளர்கள், அதற்கு தீ வைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |