மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசு சாணக்கியனுக்கு பதில்
எந்தவொரு தேர்தலையும் பிற்போடுவதற்கான எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் இல்லை என பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று (19) இடம்பெற்ற அமர்வின் போது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனால் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்குமாறு இரா. சாணக்கியன் கோரினார்.
தேர்தலை நடத்த ஏற்பாடு
அதற்கு பதிலளித்த அமைச்சர், மாகாண சபைத் தேர்தல் மாத்திரமல்ல எந்தவொரு தேர்தலையும் பிற்போடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனத் தெரிவித்தார்.
தேர்தலை உரிய காலத்தில் நடத்தி மக்கள் பிரதிநிதிகளை முறையாக தேர்ந்தெடுப்பதற்கான சகல விடயங்களையும் அரசாங்கம் முன்னெடுக்கும்.
மாகாண சபைத் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் ஏதேனும் சிக்கல் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்து தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
எவ்வாறாயினும் தேர்தல் நடத்தப்படும் வரையில் மாகாண வீதி அபிவிருத்திகள் ஒருபோதும் பிற்போடப்படாது என்பதுடன் அதற்கான நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ள நிலையில் அந்த பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
