மீண்டும் ஒத்திவைக்கப்படும் மாகாண சபைத் தேர்தல் : கிளம்பியுள்ள எதிர்ப்பு
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு நேற்று (11) நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது.
இத்தெரிவுக்குழுவிற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் அதன் கால எல்லை டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதாக நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

அந்தவகையில், மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே ஒத்திவைப்பதற்காகவே இந்த விசேட குழுவின் காலம் நீடிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளதுடன் அந்த தெரிவுக்குழுவிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அல்லாமல், அதனைப் பிற்போடுவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள ஒரு தெரிவுக்குழு என்றே இதனை வரையறுக்க முடியும் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |