இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இலங்கை மகளிர் அணி

Cricket Sri Lanka Cricket Pakistan national cricket team Sports
By Dharu Sep 12, 2026 01:12 AM GMT
Report

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

டுபாயில்  நேற்று(11) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

வெற்றி இலக்கு

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணியின் தலைவி ஃபாத்திமா சனா  ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சமரி அத்தபத்து மற்றும் சாமுடி பிரபோதா  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து, 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இறுதிப் போட்டி

இலங்கை அணியின் வெற்றிக்கு ஹர்ஷிதா சமரவிக்ரம  36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஃபாத்திமா சனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் மகளிர் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026