சர்வதேசத்தை ஏமாற்ற கண்துடைப்பு நாடகம் - இலங்கை அரசாங்கம் மீது குற்றச்சாட்டு
இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில், திருத்தங்களை மேற்கொள்வதாக கூறி ஐரோப்பிய ஒன்றியத்தையும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையையும் அரசாங்கம் ஏமாற்றி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran )தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள திருத்தங்கள் வெறுமனே கண்துடைப்பு நாடகம் என அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், இ.ஆனல்ட், கே.சயந்தன் ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், குடிசார் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
