மாவீரர் தின நிகழ்வில் கைதான தமிழ் மாணவன் : சாணக்கியன் வெளியிட்ட தகவல்! (காணொளி)
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நால்வருக்கு நாளைய தினம் பிணை வழங்கப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வவுனதீவில் கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் தனுசனுக்கும் இவ்வாறாக பிணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சாணக்கியன் தமது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியுள்ளார்.
அத்துடன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளிடம் தாம் முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது
தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்த சென்ற 4 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீ்ழ் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை தாமும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்ததாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அதிபர் செயலகத்தின் உத்தரவின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு நியுட்டன் தனுசனின் கோவைகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த மாணவனின் கோவைகள் இன்று 11 மணியளவில் அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
விடுவிப்பதற்கான நடவடிக்கைகள்
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏனையவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சாணக்கியன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சி.ஐ.டியால் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |