அதிரடியாக பதவி நீக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சித் தலைவர்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து, பாரிஸ்டர் கோஹர் அலி கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக வெலளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 8ஆம் திகதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தோ்தல் நடைபெற்ற நிலையில் அதனுடன் சோ்த்து பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா ஆகிய மாகாணப் பேரவைகளுக்கும் தோ்தல் நடைபெற்றது.
பொதுத் தோ்தலில், அதிகபட்சமாக முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளா்கள் 93 இடங்களைக் கைப்பற்றினா்.
நிராகரித்த இம்ரான் கான்
நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சிக்கு 75 இடங்கள் கிடைத்தன.
முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் மகனும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்று 3ஆம் இடத்தைப் பிடித்தது.
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் முடிவை தற்போது சிறையிலுள்ள இம்ரான் கான் நிராகரித்துவிட்டார்.
புதிய தலைவராக
இந்த சூழலில், பாகிஸ்தானில் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி புதிய அரசை அமைக்கவிருக்கிறது.
இந்த நிலையில், தேர்தலில் மோசமான செயற்பாடு காரணமாக, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து, பாரிஸ்டர் கோஹர் அலி கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அக்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க உட்கட்சித் தேர்தல் மார்ச் 3ஆம் திகதி நடைபெறும் எனவும், கட்சியின் புதிய தலைவராக 71 வயதான பாரிஸ்டர் அலி ஸாபர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்மை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |