முற்றுகிறது மோதல் - எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை
தற்போது நடைபெற்றுவரும் உயர்தர பரீட்சைக்காலத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியின்றி மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக எதிர்வரும் இரண்டு நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இன்று (28) தெரிவித்தார்.
உயர்தர பரீட்சைக் காலத்தில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை மேற்கொள்வது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வலுச்சக்தி அமைச்சின் எந்தவோர் அதிகாரிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
பரீட்சை காலத்தில் மின்துண்டிப்பு
பரீட்சை காலத்தில் மின் விநியோகத்தை துண்டித்தால் விளைவு எப்படி அமையும் என மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் அங்கிருந்த மேலதிக செயலாளரிடம் சட்டம் குறித்து விளக்கியதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.
பிரச்சினைக்கு அடிப்படை காரணம்
இந்த கலந்துரையாடலுக்கு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக செயலாளர் ஒருவரின் பங்கேற்பே இந்தப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
