மின் கட்டணம் குறைப்பு - நாடகமாடும் அரசு..! கடுமையாக சாடும் சஜித் அணி
புதிய இணைப்பு
அண்மைய மின்சாரக் கட்டண குறைப்பிற்காக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பொய்யாகக் நற்பெயரைப் பெற முயல்வதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் பேசிய பெரேரா, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) சுதந்திரமாக கட்டணங்களைக் குறைக்க முடிவு செய்ததே தவிர அதை அரசாங்கம் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய கட்டணக் குறைப்பு சாத்தியமில்லை என எரிசக்தி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
ஒரு ஜே.வி.பி தலைவர் கூட PUCSL முன் மின்சார கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பேசவில்லை என பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
03 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்கும் கொள்கையின் ஒரு படியாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என அரச தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி (Kumara Jayakody) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு
நேற்று (17) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தில் 20% குறைப்பை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.
அதன்படி, அந்த பரிந்துரைகளை வலுசக்தி அமைச்சகத்திற்கு வழங்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (Public Utilities Commission) நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
