புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் க.விஜயகுமார் காலமானார்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான க.விஜயகுமார் அவர்கள் இன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புகள் பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட இலங்கை அரசினுடைய அத்துமீறல் செயற்ப்பாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினுடைய முன்னாள் உறுப்பினருமான க.விஜயகுமார் அவர்கள் இன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இறுதி நிகழ்வுகள்
இவருடைய உடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு நாளை(15) மாலை இவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது


அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்