எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்
India
Death
Tamil Nadu
Chennai
Pulavar Pulamaipithan
By Chanakyan
அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் தனது 85ஆவது வயதில் இன்று காலை சென்னையில் உயிரிழந்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 28ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி புலவர் புலமைப்பித்தன் காலமானார். நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புலவர் புலமைப்பித்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்