புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு : தண்டனையை உறுதி செய்தது யாழ்.மேல் நீதிமன்று

Jaffna Murder High Court of Sri Lanka
By Theepan Jun 15, 2026 07:36 PM GMT
Report

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை உயர் நீதிமன்றினால் , வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று இன்றைய தினம் திங்கட்கிழமை விடுதலை செய்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் மாணவி கடத்தப்பட்டு , கூட்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

07 பேரும் உச்ச நீதிமன்றில் மேன் முறையீடு

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் 07 பேரை குற்றவாளியாக கண்ட ட்ரயல்ட் பார் தீர்ப்பாயம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. குறித்த தீர்ப்பினை எதிர்த்து 07 பேரும் உச்ச நீதிமன்றில் மேன் முறையீடு செய்ததை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இருவரை உச்ச நீதிமன்று விடுதலை செய்ததுடன் , ஏனைய ஐவரின் மரண தண்டனையை உறுதி செய்தது.

விசாரணை காலத்திலேயே மரண தண்டனை கைதி ஒருவர் சிறையில் நோய் வாய்ப்பட்டு , இறந்த நிலையில் , ஏனைய நால்வரின் தண்டனையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று மீண்டும் உறுதி செய்வதற்காக யாழ்ப்பாணம் அழைத்து வந்த நிலையில் , கடந்த 25ஆம் திகதி நால்வரில் ஒருவர் சிறையில் உயிரை மாய்த்துக்கொண்டார்.

சட்டவிரோதமாக சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு சமூக அந்தஸ்தைப் பாராமல் தண்டனை

சட்டவிரோதமாக சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு சமூக அந்தஸ்தைப் பாராமல் தண்டனை

தண்டனையை உறுதி செய்தது யாழ்.மேல் நீதிமன்று

அதனால் தீர்ப்பினை உறுதி செய்வதற்காக அன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஐந்து குற்றவாளிகளில் இருவர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் ஏனைய மூவருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேல் நீதிமன்று வாசித்து காட்டி உறுதி செய்தது. உச்ச நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று விடுதலை செய்தது.   

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு : தண்டனையை உறுதி செய்தது யாழ்.மேல் நீதிமன்று | Pungudutheevu Student Murder Case

பிள்ளையான் வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்! புலனான 5 மனிதக்கொலைகள்

பிள்ளையான் வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்! புலனான 5 மனிதக்கொலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்