உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறியவர்களுக்கு தண்டனை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

CID - Sri Lanka Police Duminda Dissanayake Easter Attack Sri Lanka Shani Abeysekara
By Sathangani Jun 13, 2026 07:19 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவல்கள் முன்னரே கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க தவறிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்று நேரத்தை வீணடிப்பதை விட தாக்குதலை மிக எளிதாகத் தடுத்திருக்ககூடிய பொறுப்பில் இருந்தும் அலட்சியமாக செயற்பட்டவர்களை கண்டறிவதே தற்போதைய முக்கிய தேவையாகும்.

தலதா மாளிகையை முதலில் தாக்கியது விடுதலைப் புலிகள் அல்ல! ராஜித பகிரங்கம்

தலதா மாளிகையை முதலில் தாக்கியது விடுதலைப் புலிகள் அல்ல! ராஜித பகிரங்கம்

அலட்சியத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்

நாட்டில் சிறு சண்டை நடந்தால் கூட 119 என்ற அவசர அழைப்பு மூலம் காவல்துறையினர் விரைந்து செயற்படும் நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கும் இடங்கள் மற்றும் நபர்களின் பெயர்கள் உட்பட அனைத்து தகவல்களும் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கிடைத்தும் சம்பந்தப்பட்ட தேவாலயங்களுக்கு ஒரு காவல் நிலையத்தின் வாகனத்தைக் கூட அனுப்பாமல் வேடிக்கை பார்த்தது ஏன் என்ற பலத்த கேள்வி எழுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறியவர்களுக்கு தண்டனை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Punishment For Who Failed To Prevent Easter Attack

யுத்தகாலத்தில் கூட குண்டுதாரிகள் பற்றிய தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சோதனைகளை நடத்தி அச்சுறுத்தல்கள் தவிர்க்கப்பட்ட வரலாறுகள் உள்ள நிலையில், இந்தத் தகவல் கிடைத்தும் உயர் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

காவல்துறையினர் வாகனங்களையோ அல்லது வீதித் தடைகளையோ ஏற்படுத்த வேண்டாம் என உயர் மட்டத்திலிருந்து ஏதேனும் மறைமுக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

2019 ஆம் ஆண்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்த சானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்ற உயர் அதிகாரிகள் மற்றும் அப்போதைய காவல்துறை உயர் மட்டத்தினர், மாகாணப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இந்த அலட்சியத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்.

சங்கீத்சனின் விடுதலை! நாமல் வெளியிட்டுள்ள பதிவு

சங்கீத்சனின் விடுதலை! நாமல் வெளியிட்டுள்ள பதிவு

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி

அவர்களில் பலர் இன்றும் அரச சேவையிலோ அல்லது ஓய்வூதியம் பெற்றுக்கொண்டோ சுதந்திரமாக வருவது கண்டிக்கத்தக்கது.

பயங்கரவாதக் குழுக்கள் திட்டமிடுவதை விட, அந்தத் திட்டத்தைத் தெரிந்து வைத்திருந்தும் தடுக்காமல் விட்ட பாதுகாப்புத் துறையினரின் அலட்சியமே 200க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகவும், நூற்றுக்கணக்கானோர் இன்று வரை மாற்றுத்திறனாளிகளாகப் பாதிக்கப்பட்டு போராடவும் காரணமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறியவர்களுக்கு தண்டனை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Punishment For Who Failed To Prevent Easter Attack

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமாயின், இந்தத் தகவலைக் கையாள்வதில் அலட்சியமாக இருந்த அதிகாரிகளை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும்.

மேலும், இந்த தாக்குதல் விசாரணை தொடர்பான குழுக்கள் நியமனத்தில் கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் விமர்சனங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

அத்துடன் அரசாங்கம் ஒருபுறம் சுயாதீனக் குழு என்றும், மறுபுறம் திருச்சபையின் விருப்பப்படியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும் இரட்டை வேடம் போடுவதை நிறுத்தி, சட்டம் மற்றும் நீதியை அனைவருக்கும் சமமாக நிலைநாட்ட வேண்டும்“ என தெரிவித்தார்.

முதியோர் கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்!

முதியோர் கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! .


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி