அரசியல்வாதிகளை பேர ஏரிக்குள் தள்ளிவிட்டவர் சிக்கினார்
By Sumithiran
அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் பணத்தை கொள்ளையடித்து அவரை பேர ஏரியில் தள்ளியதாக கூறப்படும் நபர் ஒருவர் வகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர்.
பிரதேசசபை உறுப்பினர் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, சந்தேக நபர் உள்ளிட்ட சிலர் அவரை பேருந்தில் இருந்து இறக்கி,அவரின் பணப்பையை கொள்ளையடித்து, பின்னர் அவரை பேர ஏரியில் தள்ளிவிட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய குழுவைக் கண்டுபிடிக்க இந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி