நிறுத்தப்படும் உக்ரைன் - ரஷ்ய போர்: புடின் அதிரடி அறிவிப்பு!
உக்ரைன்-ரஷ்யா மோதலில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
அதன்படி, இந்த போர் நிறுத்தம் மே 8 முதல் மே 11 வரை நடைமுறையில் இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறிக்கும் வெற்றி நாள் கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், உக்ரைன் போர் நிறுத்தத்தை மீறினால் எதிர் தாக்குதல் நடத்த ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல்கள்
இதேவுளை, கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, உக்ரைனுடன் 30 மணி நேர போர்நிறுத்தத்தை அறிவிக்க ரஷ்யா நடவடிக்கை எடுத்திருந்தது.
இருப்பினும், போர் நிறுத்த காலத்தில் தாக்குதல்கள் குறைந்திருந்தாலும், இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
