ஹவுதி மீது அமெரிக்க கோர வான்வழித் தாக்குதல் : 68 பேர் பலி
ஹவுதி (Houthi) கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு மையம் ஒன்றின் மீது அமெரிக்கா (United States) மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.
வடமேற்கு ஏமனில் (Yemen) உள்ள ஆபிரிக்க குடியேறிகளுக்கான தடுப்பு மையத்தின் மீதே நேற்றைய தினம் (27.04.2025) இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர்
ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சு, சுமார் 115 புலம்பெயர்ந்தோர் தாக்குதல் மேற்கொண்ட இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதாகவும், 47 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியா மற்றும் பிற ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பேர் சவூதி அரேபியாவில் வேலை தேடி ஏமன் வழியாக பயணம் செய்தபோது இந்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடியேறிகளில் எத்தியோப்பியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த ஆபிரிக்க குடியேறிகள் அடங்குவர், மேலும் அவர்களில் 68 பேர் இறந்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
