புடினின் மிகப்பெரும் திட்டம் -தயாராகும் இரண்டு இலட்சம் வீரர்கள் - வைச்ச குறி தப்பாது என கடும் எச்சரிக்கை

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Sumithiran Dec 15, 2022 10:31 PM GMT
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்ய அதிபர் புடின் மிகப்பெரும் திட்டத்தை வைத்துள்ளதாகவும் தாக்குதலுக்கு 200,000 வீரர்கள் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைள் தலைநகரை கைப்பற்ற ரஷ்யா மற்றுமொரு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு தயாராகி வருவதை கசிந்த தரவுகளின் அடிப்படையில் உக்ரைன் முதன்மை தளபதி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இரண்டு இலட்சம் வீரர்கள் தயார் நிலையில்

புடினின் மிகப்பெரும் திட்டம் -தயாராகும் இரண்டு இலட்சம் வீரர்கள் - வைச்ச குறி தப்பாது என கடும் எச்சரிக்கை | Putin Is Building Second Attack On Kyiv

ரஷ்யாவில் புதிதாக படைக்கு திரட்டப்பட்ட 200,000 பேரை படையெடுப்புக்கு தயார்படுத்தி, விளாடிமிர் புடின் ஒரு புதிய தாக்குதலுக்கு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என தளபதி Valery Zaluzhny தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைனுக்குள் அதிரடியாக புகுந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை 175,000 என கூறப்பட்டுவரும் நிலையில், தற்போது மாபெரும் படையுடன் விளாடிமிர் புடின் இரண்டாவது தாக்குதலுக்கு தயாராகிறார் என தளபதி Valery Zaluzhny சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி கடைசி வாரத்தில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில், அதுவும் இல்லை என்றால் கட்டாயம் மார்ச் மாதம் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படும் என கூறியுள்ள அவர், நாம் கண்டிப்பாக அதற்கு தயாராக வேண்டும் என்றார்.

தாக்குதல் ஆரம்பிக்கும் இடங்கள்

புடினின் மிகப்பெரும் திட்டம் -தயாராகும் இரண்டு இலட்சம் வீரர்கள் - வைச்ச குறி தப்பாது என கடும் எச்சரிக்கை | Putin Is Building Second Attack On Kyiv

பெலாரஸ் நாட்டில் இருந்து நேரடியாக கீவ் மீது இந்த தாக்குதல் தொடங்கும் எனவும், கிரிமியாவில் இருந்து கூட தாக்குதல் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் மேற்கத்திய நட்பு நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளித்து உதவ முன்வர வேண்டும் எனவும் தளபதி Valery Zaluzhny கோரிக்கை விடுத்துள்ளார். முதற்கட்டமாக 300 டாங்கிகள், 600- 700 IFV, 500 howitzers தேவைப்படுவதாகவும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

பின்வாங்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை

புடினின் மிகப்பெரும் திட்டம் -தயாராகும் இரண்டு இலட்சம் வீரர்கள் - வைச்ச குறி தப்பாது என கடும் எச்சரிக்கை | Putin Is Building Second Attack On Kyiv

கடந்த பெப்ரவரியில் களமிறக்கப்பட்ட இராணுவமாக இது இருக்காது, தற்போது களமிறக்கப்படுபவர்கள், உக்கிரமாக போருக்கு தயாராகி வருபவர்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

வெளிவரும் தகவல்கள் அடிப்படையில், உக்ரைன் போரில் இருந்து ரஷ்யா பின்வாங்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே தெரியவருகிறது என்றார். உக்ரைனும் தனது பங்கிற்கு தயாராகி வருகிறது என குறிப்பிட்டுள்ள தளபதி Valery Zaluzhny உரிய திட்டங்கள் வகுக்கப்படுகிறது என்றார். 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015