ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்! இராஜதந்திர காய் நகர்த்தும் புடின்
ஈரான் மோதல் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
சமரச அடிப்படையிலான அமைதி ஒப்பந்தங்களை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் மற்றும் இராஜதந்திர செயல்முறையைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர் என கிரெம்ளின் அறிக்கை கூறியுள்ளது.
உக்ரைன் போர் தொடர்பான மனிதாபிமானப் பிரச்சினைகளில் ஐக்கிய அரபு அமீரகம் அளித்த ஆதரவிற்கும் புடின் நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் விவாதம்
இதற்கு மேலதிகமாக பேச்சுவார்த்தையை எளிதாக்குவதற்கும் பிராந்திய நிகழ்வுகள் குறித்து விவாதிப்பதற்கும் ஈரானுக்கு இரண்டு நாள் பயணத்தை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி மேற்கொண்டுள்ளார்.

பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக அமைச்சர்கள் இதன்போது கூட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுவான பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்காக, கலந்துரையாடல்களை ஆழப்படுத்துவதில் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர், என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தீர்வை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகளை பாகிஸ்தான் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |