நீடிக்கும் போர் - புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் புடின்!

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russian Federation
By S P Thas May 30, 2022 06:04 AM GMT
Report

ரஷ்யாவின் ஆயுதப்படையில் மேலும் பலரை சேர்க்க அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நான்காவது மாதமாக தொடர்ந்துவரும் நிலையில், ​​ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஆயுதப்படையில் சேரும் புதிய சட்டத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.

புதிய சட்டம்

நீடிக்கும் போர் - புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் புடின்! | Putin New Move Ukraine War

இந்த நடவடிக்கை உக்ரைனில் நடக்கும் போருக்காக மேலும் சிவிலியன் நிபுணர்களை நியமிக்க ரஷ்யாவிற்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த வாரம் ரஷ்யாவின் நாடாளுமன்றம் இராணுவத்தில் சேரும் நபர்களுக்கான உயர் வயது வரம்பை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றியது.

அதிகளவான மருத்துவ நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு நிபுணர்கள் உட்பட அதிக தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாக ரஷ்யா இந்த சட்டத்தை முன்வைக்கிறது.

உக்ரேனிய மற்றும் மேற்கத்திய இராணுவ நிபுணர்களின் கூற்றுப்படி, போரில் ரஷ்யா சுமார் 30,000 வீரர்களின் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. கடந்த அதிகாரபூர்வ ரஷ்ய அறிக்கைகள் மார்ச் 25 அன்று மொத்தம் 1,351 பேர் இறந்ததாகக் கூறியது, அதன் பிறகு அந்த எண்ணிக்கை புதுப்பிக்கப்படவில்லை.

அதிபர் புடின் உக்ரைனில் போருக்காக பெரிய அளவிலான ஆட்சேர்ப்பைத் தவிர்த்தார், இருப்பினும், கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிலர் மோதலில் ஈடுபட்டதாக மார்ச் மாதம் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக்கொண்டது, மேலும் சிலர் உக்ரேனியப் படைகளால் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

அதிகாரபூர்வ கொள்கையல்ல

நீடிக்கும் போர் - புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் புடின்! | Putin New Move Ukraine War

எவ்வாறாயினும், பொதுமக்களை இராணுவத்தில் சேர்த்து அவர்களை போருக்கு அனுப்புவது நாட்டின் அதிகாரபூர்வ கொள்கையல்ல என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனில் போர் தொடருவதற்கான அறிகுறியாக "இலக்குகள்" அடையப்படும் வரை அதன் "சிறப்பு இராணுவ நடவடிக்கை" தொடரும் என்று கூறியுள்ளது.

ரஷ்ய இராணுவம் முன்னதாக நிர்ணயித்த தேசிய மற்றும் வெளிநாட்டு இராணுவ ஆட்சேர்ப்புகளுக்கான வயது வரம்பு என்பது, ரஷ்யர்களுக்கான வரம்பு 18-40 ஆண்டுகள் மற்றும் வெளிநாட்டினருக்கான வரம்பு 18-30 ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017