உக்ரேனிய படைகளில் அமர்த்தப்படும் சிறார்கள் : புடின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
உக்ரேனிய (Ukraine) சிறார்களை படையில் சேர்த்து, அவர்களை தற்கொலை குண்டுதாரிகளாக மாற்ற மூளைச்சலவை செய்ததாக ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உக்ரேனிய இளைஞர்கள் மற்றும் ஏழ்மை நிலையில் இருக்கும் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் உயிருக்கு ஈடாக பணம் அளிக்கும் மோசமான தந்திரத்தை புடின் மேற்கொள்வதாக உக்ரேனிய பாதுகாப்பு சேவை அம்பலப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மார்ச் மாதம் 15 மற்றும் 17 வயதுடைய சிறார்கள் இருவர் ரஷ்ய அதிகாரிகளின் சூழ்ச்சியால், உக்ரைன் நகரம் ஒன்றில் குண்டு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னெடுக்கப்பட்ட விசாரணை
இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் (Ivano-Frankivsk) நகரில் அவர்கள் வெடிகுண்டுடன் நடந்து சென்ற போது எதிர்பாராதவகையில் குண்டு வெடிக்க, சம்பவயிடத்திலேயே 17 வயது சிறுவன் உடல் சிதறி பலியாகியுள்ளான்.
இருப்பினும், குறித்த 15 வயது சிறுவன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவர்கள் கொண்டு சென்ற வெடிகுண்டானது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்பதுடன், தொலைவில் இருந்து இயக்கப்படும் கருவியால் இணைக்கப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய தரப்பு
அத்தோடு, இருவருக்கும் ரஷ்ய தரப்பு பணம் அளித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளதுடன் இளைஞர்களை மூளைச்சலவை செய்வது எளிது என்பதால், ரஷ்யா வேண்டுமென்றே அவர்களை கவர்ந்திழுக்கிறது என்று பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய உளவுத்துறை அத்தகையவர்களை ஒரு முறை பயன்படுத்தப்படும் பொருளாகக் கருதுவதாகவும் அவர்களைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யா தனது கடுமையான போரில் எவ்வாறு விரக்தி அடைந்துள்ளது என்பதைக் காட்டும் பல உதாரணங்களில் இந்தத் தாக்குதல்கள் சமீபத்தியவை என்றே உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
