ஏஐ தொழில்நுட்பத்தில் திரைப்படமாகும் புடினின் வாழ்க்கை வரலாறு
ரஷ்ய (Russia) அதிபர் விளாடிமிர் புடினின் (Vladimir Putin) வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை (Artificial Intelligence) பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த படத்தில் புடினுடைய பாத்திரத்தை போலந்தை சேர்ந்த நடிகர் ஏற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நடிகர் படப்பிடிப்பில் நடித்த பின்னர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் அவரது முகத்தை புதினாக மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் ரீதியான படம்
இந்தப் படத்தில், புடினின் அரசியல் செயற்பாடுகள், உக்ரைன் மீது போர் தொடுக்க எடுத்த முடிவு உள்ளிட்ட அவரது வாழ்க்கையில் நடந்த பல உண்மை சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
படவேலைகள் இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில் படத்தின் திரை முன்னோட்டத்தினை கேன்ஸ் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) வெளியிட்டு சர்வதேச கவனத்தை ஈர்க்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
புடினின் வாழ்க்கைப் படம் இந்த ஆண்டு (2024) இறுதியில் திரைக்கு வர உள்ளது.
இந்த படம் விறுவிறுப்பான அரசியல் ரீதியான படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |