உக்ரைனின் துல்லிய தாக்குதலில் புடினின் நம்பிக்கைக்குரிய தளபதி பலி
ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ரஷ்யாவின் 51-வது ஒருங்கிணைந்த ஆயுதப் படையின் (51st Combined Arms Army) தளபதி லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி மில்காகோவ்,உக்ரைன் நடத்திய துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக செப்டம்பர் 14 அன்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஓகஸ்ட் 26 அன்று ரஷ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யக் கட்டளை மையங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் இந்த ஜெனரல் கொல்லப்பட்டார்.
உயிரிழப்பை உறுதிப்படுத்திய உக்ரைன் இராணுவத்தலைமை
ஓகஸ்ட் 27 அன்று, உக்ரைனின் இராணுவத் தலைமை (General Staff) இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியது. டொனெட்ஸ்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யக் கட்டளை மையங்கள் துல்லியமான தாக்குதல்களால் அழிக்கப்பட்டதாகவும், ரஷ்ய அதிகாரிகளுக்கு ஏற்பட்ட "கடுமையான இழப்புகள்" குறித்த தகவல்கள் இன்னும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் அப்போது தெரிவித்தது.

மில்காகோவ் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது குறித்த செய்தியை வெளியிட்ட ரஷ்யாவின் சுயாதீன ஊடகமான 'வாஷ்னியே இஸ்டோரி' (Vazhniye Istorii), இது உறுதிப்படுத்தப்பட்டால், உக்ரைனுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட 23-வது ரஷ்ய ஜெனரலாக அவர் இருப்பார் என்று கூறியது.
‘ரஷ்யாவின் வீரன்’
ரஷ்ய ஆதரவு பிரச்சாரகரான அனஸ்தேசியா கஷேவரோவா, இந்தத் தாக்குதல் ஒரு துல்லியமான தாக்குதலாகத் தெரிவதாகவும், கட்டளை மையம் இருந்த இடம் குறித்த தகவல் "நமது சொந்த தரப்பிலிருந்தே" கசிந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் ‘ரஷ்யாவின் வீரன்’ (Hero of Russia) என நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 14 மணி நேரம் முன்