அணு ஆயுத வரம்புகள் தொடரும்: புடின் முக்கிய அறிவிப்பு
ஒரு வருடத்திற்கு அணு ஆயுத வரம்புகளை கடைபிடிப்போம் என ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது.
ஆயுத வரம்பு
இருந்த போதிலும், மேலும் ஒரு வருடத்திற்கு அணு ஆயுத வரம்புகளை கடைபிடிப்போம் என புடின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா, எங்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒப்பந்தத்தின் வரம்புகளைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
