பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது இஸ்ரேல் பிரதமர் கர்சிப்பு
பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று(22) திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
பயங்கரவாதத்துக்கு பரிசை வழங்குகிறார்கள்
”பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் முயற்சிப்பதற்கானபதில், நான் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் வழங்கப்படும்.
ஒக்டோபர் 7 படுகொலைக்குப் பிறகும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுள், பயங்கரவாதத்துக்கு பரிசை வழங்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அது நடக்கப் போவதில்லை. ஜோர்டான் நதியின் மேற்கில் எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது.
யூத குடியேற்றத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம்
பல ஆண்டுகளாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் அழுத்தத்துக்கு மத்தியில், பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்து வருகிறேன்.
இதனை நாங்கள் உறுதியுடன் செய்து வருகின்றோம். மேலும், யூதேயா மற்றும் சமாரியாவில் யூத குடியேற்றத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
