உலக அரசியலில் சீனாவின் பலப்பரீட்சை: ட்ரம்ப் புறப்பட்ட மறுநாளே பெய்ஜிங் சென்றடையும் புடின்

Donald Trump Vladimir Putin Xi Jinping World Russia
By Shalini Balachandran May 19, 2026 08:01 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீனப் பயணம் நிறைவடைந்த அடுத்த நாளே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை பெய்ஜிங் சென்றடையும் புடின், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் நட்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளார்.

கடந்த வாரம் சீனா வந்திருந்த ட்ரம்ப, ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார்.

போலி தமிழ்தேசியவாதி : துகிலுரிக்கும் யாழ்.பல்கலை மாணவர்கள்

போலி தமிழ்தேசியவாதி : துகிலுரிக்கும் யாழ்.பல்கலை மாணவர்கள்

சர்வதேசப் பிரச்சினை

இருப்பினும், தைவான் விவகாரம் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணி ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் போர் உள்ளிட்ட முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில் இரு நாடுகளுக்கும் இடையே பெரிய அளவில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.

உலக அரசியலில் சீனாவின் பலப்பரீட்சை: ட்ரம்ப் புறப்பட்ட மறுநாளே பெய்ஜிங் சென்றடையும் புடின் | Putin Visits Beijing After Trump China Trip

அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ள இந்தச் சூழல் ரஷ்யாவிற்குச் சாதகமாக அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வரும் ரஷ்யாவும் சீனாவும் தங்களின் மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் பலப்படுத்திக் கொள்ள புடினின் இந்த விஜயம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் அதே தவறை செய்யவேண்டாம் :ஈரான் உயர் தளபதியிடமிருந்து அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மீண்டும் அதே தவறை செய்யவேண்டாம் :ஈரான் உயர் தளபதியிடமிருந்து அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முக்கிய சக்தி

சர்வதேச ஊடகமொன்றிற்குப் பேட்டியளித்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர் மரினா மிரோன், இந்தச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் இராணுவத் தொழில்நுட்பப் பகிர்வு ஆகியவை மேலும் ஆழமடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா பொருளாதார ரீதியாகச் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரித்துள்ளதால் இந்தச் சந்திப்பு ஷி ஜின்பிங்கை விட புடினுக்கே மிக முக்கியமானது என்றும் சீனாவிடம் இருந்து கூடுதல் இராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை ரஷ்யா எதிர்பார்க்கலாம் என்றும் மற்றுமொரு ஆய்வாளர் டிமோதி ஆஷ் தெரிவித்துள்ளார்.

உலக அரசியலில் சீனாவின் பலப்பரீட்சை: ட்ரம்ப் புறப்பட்ட மறுநாளே பெய்ஜிங் சென்றடையும் புடின் | Putin Visits Beijing After Trump China Trip

அதே நேரத்தில் உலக அரங்கில் ஒரு நடுநிலையான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சீனா முயற்சிக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி என இரு துருவங்களாகச் செயல்படும் உலகத் தலைவர்களை அடுத்தடுத்த நாட்களில் தனது நாட்டுக்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் சர்வதேச அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய சக்தியாகச் சீனா உருவெடுத்துள்ளது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

முழு இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குங்கள் : சபையில் அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

முழு இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குங்கள் : சபையில் அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026