அமைதியை மறுத்தால் இராணுவ வழியில் இலக்குகள் நிறைவேறும்! உக்ரைனுக்கு புடின் எச்சரிக்கை
உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால், ரஷ்யா இராணுவ வழியில் அனைத்து சிறப்பு ஒபரேசன் இலக்குகளை அடையும் என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்த கருத்து சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போர் நிறுத்த விவகாரத்துக்கு மத்தியில் குறித்த கருத்தானது அச்ச நிலையையும் தூண்டியுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் இடையில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் பல சொத்துக்கள் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க தரப்பு
இது சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி அமெரிக்க தரப்பு போரை முடிவுக்கு கொண்டுவர 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது.

இதில் பெரும்பாலான அம்சங்களில் அமெரிக்கா- உக்ரைன் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.
எனினும், உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுப்பதும், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுஉலையான சபோரிசியாவை ரஷ்யாவிடம் ஒப்படைக்கவும் உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.
கரீபியன் கடற்பரப்பில் போர் பதற்றம்: அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பின் மதுரோவின் அதிரடி அறிவிப்பு
ட்ரம்ப், ஜெலன்ஸ்கி சந்திப்பு
இது தொடர்பாக மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி இன்று புளோரிடாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, சந்திக்க உள்ள பின்னணியில் மேற்கண்ட கருத்தை ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் புடின் மேற்படி கருத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
மேலும், உக்ரைன்- ரஷ்யா எல்லையில் பாதுகாப்பு நகர்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றும் ரஷ்யப் படைகள் டான்பாஸ் மற்றும் சபோரோசியே பிராந்தியத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |