உக்ரைனுக்கு முதல் இலங்கையை தாக்கியிருப்பார் புடின் -காரணத்தை கூறும் எதிர்க்கட்சி
ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின், தன்னை இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் ஒப்பிடுவது தெரிந்திருந்தால், உக்ரைனை தாக்கும் முன், இலங்கையை தாக்கியிருப்பார் என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்கத்தால் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியவில்லை எனவும், ஏழு மூளையில்லாதவர் நிதி அமைச்சராகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று 60 இலட்சம் மட்டுமல்ல 225 இலட்சம் பேர் தண்டிக்கப்படுவதாகவும் எனவே இந்த அரசாங்கங்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அரசாங்கத்தை உடனடியாக மாற்றாவிட்டால் நாடு எஞ்சியிருக்காது எனவும், நாட்டை ஆளக்கூடிய எவருக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
