ரஷ்ய அதிபர் புடினின் மிகப்பெரிய இலட்சியங்கள் -வெளிப்படுத்திய பைடன்
russia
ukraine
us
biden
pudin
By Sumithiran
ரஷ்ய அதிபர் புடினுக்கு 'மிகப் பெரிய இலட்சியங்கள் உள்ளன' என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பைடன், விளாதிமிர் புடினுக்கு உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் வேறு "மிகப் பெரிய இலட்சியங்கள்" உள்ளதாக தாம் நம்புவதாக கூறினார்.
"புடின் உண்மையில் முன்னாள் சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ விரும்புகிறார்" என்று பைடன் தெரிவித்தார்.
"அவரது இலட்சியங்கள் உலகின் பிற பகுதிகள் வந்துள்ள தற்போதைய நிலைக்கு முற்றிலும் முரணானது," என்றும் அவர் கூறினார்.
ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் பல தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தடைகள் மட்டுமன்றி புடினுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை விதிக்கும் வாய்ப்பு "இன்னும் பரிசீலனையிலேயே உள்ளது" என்றும் பைடன் தெரிவித்தார்.
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 17 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்