ரஷ்யாவில் உலாவும் போலி புடின்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்
ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்ததிலிருந்தே அதிபர் விளாடிமிர் புடினை போலவே ரஷ்யாவில் பலர் இருப்பதாகவும் அவர்கள் புடினுக்கு டூப்பாக செயல்படுவதாகவும், தகவல்கள் வெளியாகியது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக மூன்று பேர் புடினுக்கு டூப்பாக செயல்பட்டுள்ளார்கள் என உக்ரைன் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் புடினுக்கு டூப்பாக செயல்படுபட்டவர் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த எவ்ஜெனி வாசிலியேவிச்(Yevgeny Vasilyevich) என்று ரஷ்ய வர்ணனையாளரான டாக்டர் வலேரி சோலோவி(Dr Valery Solovey) என்பவர் தெரிவித்துள்ளார்.
புடினுக்கு டூப்பாக செயல்படுபவர்
இவர் முன்பு மாஸ்கோ சர்வதேச உறவுகள் நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார். மேலும் புடினுக்கு டூப்பாக செயல்பட்டவர், தச்சுவேலை செய்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புடினுடைய டூப்பாக செயல்பட்ட மற்றொரு நபர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏதோ ஒவ்வாமை என முதலில் மருத்துவர்கள் நினைத்ததாகவும், ஆனால், அவருக்கு விசம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பின்னர் தெரியவந்ததாகவும் வலேரி சோலோவி கூறியுள்ளார்.
அவரைக் கொல்லும் அளவுக்கு விசம் கொடுக்கப்படாததால் அவர் உயிர் பிழைத்துள்ளதாகவும், அவருக்கு எப்படி விசம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து ரஷ்ய அதிகாரிகள் விசாரித்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |