பிரமிக்க வைக்கும் புடினின் சொகுசு ரயில் -இத்தனை வசதிகளா..!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தனிப்பட்ட பாதுகாப்பு ரயிலில் பிரமிக்கும் அளவுக்கு வசதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
தன்னுடைய பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத விளாடிமிர் புடின் தன் அரண்மனை, தனிப்பட்ட அலுவலகம் என அனைத்தையுமே யாராலும் செல்ல முடியாத பகுதிகளாகவே வைத்திருக்க விரும்புவதாக அதிகாரிகள் சொல்கின்றனர்.
பிரத்தியேக ரயில்
இந்நிலையில் அண்மையில் ரஷ்ய வலைதள செய்தி அதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. அதிபர் புடினுக்கென பிரத்தியேக ரயில் இருக்கும் தகவலை அந்த வலைதளம் வெளியிட்டுள்ளது.
அந்த பிரமாண்டமான பாதுகாப்பு ரயிலில் அதிபருக்கென தனித்தனியாக 22 பெட்டிகள் பிரிக்கப்பட்டு பலதரப்பட்ட உணவகங்கள், கார் நிறுத்துமிடம், அழகு நிலையங்கள், விளையாட்டு அறைகள், ஓய்வெடுக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அதிபருக்கான தனி அழகு நிலையம் , மருத்துவ அறை, அனைத்து உபகரணங்களையும் உள்ளடக்கிய ஜிம் போன்ற வசதிகளும் உள்ளன.
ஆடம்பர வசதிகள்
ஹாமம் என சொல்லப்படும் 3.75 மில்லியன் மதிப்புடைய ஸ்பா வசதியுடன் கூடிய குளியலறை, Fancy ஷவர்கள் பொருப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாசனை திரவியங்களால் ஆன ஃபோம் பெட்டும் (bed) புடினுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இளமையாகவே தன்னை வைத்துக்கொள்ளும் இயந்திரங்களுடன் கூடிய அழகு சாதனங்கள், சுவாசப் பயிற்சிக்காக வெண்டிலேட்டர்கள், இதய துடிப்பு , உடல் வெப்பம் போன்றவற்றை பரிசோதிக்கும் கருவிகளும் ரயிலில் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக
விமானங்களைப் போலவே எளிதில் இந்த ரயிலை ட்ராக் செய்ய முடியாத காரணத்தால், உக்ரைனுடனான போரை தொடர்ந்து 2019 க்குப் பின் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிபர் புடின் பெரும்பாலும் இந்த ரயிலையே பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.